பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1427/2025
கௌரவ திலிண சமரகோன்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்காக பெறப்படும் காப்புறுதித் திட்டம் யாதென்பதையும்;
(ii) பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு மூன்றாம் தரப்புக் காப்புறுதித் திட்டம் போதுமானதா என்பதையும்;
(iii) எதிர்காலத்தில் மேற்படி காப்புறுதித் திட்டத்துக்கு பதிலாக பிறிதொரு காப்புறுதித் திட்டமொன்று பெறப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போக்களில் இன்றளவில் போதுமானளவு தொழில்நுட்ப அலுவலர்கள் சேவையாற்றுகின்றார்களா என்பதையும்;
(ii) மேற்படி டிப்போக்களின் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப அலுவலர்கள் உள்ளனரா என்பதையும்;
(iii) உரிய பயிற்சியை தொடர்ந்து மேற்படி டிப்போக்களுக்கு தொழில்நுட்ப அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு முறையானதொரு வேலைத்திட்டம் காணப்படுகின்றதா என்பதையும்;
(iv) தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் நிறுவனங்களின் மூலம் செயல்முறை பயிற்சிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களுக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்ற பயிலுநர்களை, பயிற்சிக் காலத்தின் பின்னர் நிரந்தர அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைத்திட்டமேதும் உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-23
கேட்டவர்
கௌரவ திலிண சமரகோன், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks