E   |   සි   |  

 திகதி: 2025-11-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

1474/ 2025 - கௌரவ லசித் பாஷண கமகே, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1474/2025
      கௌரவ லசித் பாஷண கமகே,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) கம்பஹா மாவட்டப் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (ii) மேற்படி வைத்தியசாலையில் ஒவ்வொரு பதவி வாரியாக நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்படி வைத்தியசாலையில் தரநிலைப்படுத்தப்பட்ட தரக் கட்டுப்பாட்டுடனான மருந்துக் களஞ்சியசாலையொன்று இல்லாமையை அறிவாரா என்பதையும்;
      (ii) ஆமெனில், தரநிலைப்படுத்தப்பட்ட தரக் கட்டுப்பாட்டுடனான மருந்துக் களஞ்சியசாலையொன்றைத் தாபிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      (iii) மேற்படி வைத்தியசாலையில் நாளாந்தம் மற்றும் மாதாந்தம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையின் சராசரிப் பெறுமானம் வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iv) மேற்படி வைத்தியசாலைக்கென முதன்மைத் திட்டமொன்று (Master plan) தயாரிக்கப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
      (v) அதற்கமைவாக, வைத்தியசாலை உச்ச வினைத்திறனுடன் இயங்கும் பட்சத்தில், எத்தனை நோயாளிகளுக்கு சேவை வழங்க முடியும் என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-14

கேட்டவர்

கௌரவ லசித் பாஷண கமகே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks