E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2858/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2858/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,—  வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     விளையாட்டு மற்றும் அது தொடர்புடைய செயற்பாடுகளை ஒளிபரப்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஊடக நிறுவனமொன்று இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளதா என்பதையும்;

      (ii) அவ்வாறெனின் அத்தகைய நிறுவனத்தின் பெயரையும்;

      (iii) சிரச, சுவர்ணவாஹினிய, தெரண, ஐ.ரி.என்., ரூபவாஹினி போன்ற தொலைக்காட்சி நிலையங்கள், விளையாட்டுக்களை ஒளிபரப்புவதற்கான உரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளனவா என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) (i) கால்டன் விளையாட்டு வலையமைப்பு (CSN) எப்போது கூட்டிணைக்கப்பட்டது என்பதையும்;

      (ii) 2012.06.01 திகதியில் உள்ளவாறு பிரதம நிறைவேற்று அதிகாரியையும் தற்போதுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரியையும்;

      (iii) கால்டன் விளையாட்டு வலையமைப்பு (CSN) அரசாங்க ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதா;

      (iv) ஆமெனில், அவ் ஒப்பந்தங்கள் யாவை

      என்பதை அவர் கூறுவாரா?

      (இ) (i) அரச நிறுவனங்களிடமிருந்து கால்டன் விளையாட்டு வலையமைப்பு (CSN) பெற்றுக்கொண்ட விளம்பரங்களையும்;

      (ii) அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றினால் கால்டன் விளையாட்டு அலைவரிசையில் வர்த்தக விளம்பரங்களை ஒளிபரப்புதவதற்கு CSN நிறுவனம் ஆரம்பம் முதல் இற்றைவரை மாதாந்தம் மேற்கொண்டுள்ள செலவினங்கள் யாவை;

      (iii) கால்டன் விளையாட்டு வலையமைப்பு (CSN) விளம்பரம் செய்யும் 10 பாரிய அரச நிறுவனங்களையும்

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-10

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடக, தகவல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks