பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2864/ ’12
கௌரவ எம். ரீ. ஹசன் அலி,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு மாநகர சபையின் ஓய்வுபெற்ற உதவி காய்ச்சியொட்டுநர் திரு. ஏ.எச்.எம். மஹ்ரூப்பின் முறைப்பாட்டுக்கு ஏற்புடையதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கொழும்பு மாநகர சபைக்கு செய்துள்ள விதப்புரை நடைமுறைப்படுத்தப்படுவதன் முன்னேற்றம் தொடர்பாக, உள்ளூராட்சி ஆணையாளர் (மே.மா) LGD/09/01/10ஆம் இலக்க, 2012.02.29ஆம் திகதிய கடிதத்தின் மூலம் நகர ஆணையாளரிடம் வினவியுள்ளார் என்பதையும்;
(ii) 2012.05.14 மற்றும் 2012.05.31ஆம் திகதிய கடிதங்களின் மூலம் தொடர்ந்தும் அது தொடர்பில் நினைவூட்டப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) 17/2005ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு முரணாகச் செயலாற்றுகின்ற கொழும்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் மேற்படி அ(i) இல் குறித்துரைக்கப்பட்டுள்ள விதப்புரையை நடைமுறைப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) திரு. மஹ்ரூப்பிற்கு விதந்துரைக்கப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்படுவதை தாமதப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks