பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2876/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் யாவை என்பதையும்;
(ii) இவர்களது சம்பளத்திலிருந்து மாதாந்தம் அறவிடப்படும் அறவீடுகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி அறவீடுகள் நிதியமொன்றில் வைப்பிலிடப்படுகின்றனவா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி நிதியம் எந்த நிறுவனத்தின் கணக்குகளில் இடப்பட்டுள்ளன என்பதையும்;
(v) இவ்வாறான அறவீடுகளை மேற்கொள்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vi) அவர்களுக்கு மீளச் செலுத்தப்படும் அறவீடுகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சிவில் பாதுகாப்பு படையினரின் சம்பளம் உரிய திகதியில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இல்லையெனில், அவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைப் பணத்தொகை யாது என்பதையும்;
(iii) மேற்படி நிலுவைச் சம்பளம் வழங்கப்படும் திகதி யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தி தற்போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் யாவை என்பதையும்;
(ii) பயிர்ச் செய்கை மற்றும் ஏனைய கைத்தொழில்களில் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா என்பதையும்;
(iii) மேற்படி நடவடிக்கைக்காக அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் யாவை என்பதையும்;
(iv) மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளினூடாக அவர்கள் வருடாந்தம் ஈட்டிக் கொடுக்கும் பணத்தொகை யாது என்பதையும்;
(v) மேற்படி பணத்தொகை எந்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-23
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-16
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks