E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2890/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2890/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      உலகளாவிய ரீதியில் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்துகின்ற வேதனம் பெறாத கெளரவ கொன்சலர்களின் எண்ணிக்கையையும்;

                 (ii)     அவர்களின் பெயர்களை அவர்கள் பிரதிநிதிப்படுத்துகின்ற நாடுகளுடனும்;

                 (iii)    அவர்கள் அவ்வாறு செய்துவருகின்ற காலத்தையும்;

      (iv) அவர்களின் நியமனங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பிரமாணங்களையும்

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ) (i) 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இலங்கையால் நியமிக்கப்பட்ட கெளரவ கொன்சலர் எவரேனும் நீக்கப்பட்டனராவென்பதையும்;

      (ii) அவ்வாறாயின், அத்தகைய கொன்சலர்களின் பெயர்களையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-23

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-16

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நியோமால் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks