E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2951/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

    1. 2951/ ’12

      கெளரவ அஜித் குமார,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

                 (ii)     ஆரம்பிக்கப்பட்ட திகதி தொடக்கம் இற்றைவரை மேற்படி நிதியத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை, அதற்குக் கிடைத்த பணத்தொகை, சமுர்த்தி நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட காலாண்டுகளின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

      (iii) 2012 ஜுன் 30ஆம் திகதியில் மேற்படி நிதியத்தின் மீதி எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) மேற்படி நிதியத்தின்,

      (i) நிதியை பயன்படுத்தக்கூடிய கருமங்கள் யாவை என்பதையும்;

      (ii) ஆரம்பத்திலிருந்து இற்றை வரை நிதி பயன்படுத்தப்பட்டுள்ள கருமங்கள் யாவை என்பதையும்;

      (iii) சட்ட நிலைமையை விபரிக்கின்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் யாவை என்பதையும்

      (iv) அங்கத்தவர் ஒருவரின் சமூகப் பாதுகாப்பு உரித்துடைமை தொடர்பிலான கோரிக்கைக்கு ஏற்ப கொடுப்பனவை செலுத்துவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதையும்;

      (v) அங்கத்தவர் ஒருவருக்கு உரித்துடைய கொடுப்பனவை செலுத்தும் போது குறிப்பிட்ட காலத்தைத் தாண்டுவதாயிருப்பின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தைப் பயன்படுத்தி வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், ஆரம்பம் தொடக்கம் இற்றை வரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளிலிருந்து ஈட்டப்பட்டுள்ள இலாபம் எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி இலாபம் பகிர்ந்தளிக்கப்படும் தரப்பினர்கள் யாவர் என்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு தரப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் பணத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-16

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks