E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2965/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 2965/ ’12

      கௌரவ அகில விராஜ் காரியவசம்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் கூறி அவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு  அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;

      (ii) அவர்களில் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் பயிற்சிக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்

      (iii) மேற்படி பயிற்சியைப் பெற்ற பட்டதாரிகளில் தெரிவுசெய்யப்பட்ட பிரிவினருக்கு மாத்திரம் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென்பதையும்

      (iv) பயிற்சி பெற்ற ஏனைய பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி உள்ளனரென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) நேர்முகப் பரீட்சையின் பின்னர் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரிகளின்  எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) பட்டதாரிகளுக்கு அரசியல் நிர்ப்பந்தங்களின் பேரில் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு செயலாற்றிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (iv) பயிற்சி பெற்றுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எத்தகைய நிர்ப்பந்தத்துக்கும் கீழ்படியாது தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-08-21

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks