பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2984/ ’12
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் குடியமரும் போது தேவையான பதிவுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படுமென அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தமது பூர்வீக நிலங்களுக்கு மீண்டும் புலம்பெயர்ந்துள்ளனர் என்பதையும்;
(ii) இவ்வாறான 32,000 குடும்பங்களுக்குத் தேவையான பதிவு, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி வசதிகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்காக இற்றைவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும்;
(iii) இன்றளவில் மேற்படி பிரச்சினை தொடர்பில் ஏறத்தாழ 1400 சுற்றுப் பேச்சுவார்தைகளின்போது விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) 2012 ஆம் ஆண்டினுள் மீண்டும் சொந்த கிராமங்களை நோக்கி புலம்பெயர்ந்துள்ள இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) புலம்பெயர்ந்த மேற்படி மக்களில் இன்றளவில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் அரச சார்பற்ற அமைப்புக்களினூடாக வழங்கப்பட்டிருக்கையில்; தேவையான பதிவுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) பிரிதொரு நாடு தலையிட்டு மேற்படி பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னர் உரிய வசதிகளையும் பதிவுகளையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-04-24
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
மீள் குடியேற்ற
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-04-24
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ குணரத்ன வீரகோன், பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks