பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3012/ ’12
கெளரவ புத்திக பதிரண,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெற எதிர்பார்த்திருக்கும் ஊழியர்களின் பிள்ளைகளை தந்தை மகன் அடிப்படையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத இரு பயிலுநர் குழுக்களாக ஆட்சேர்த்து இந்நிறுவனத்தில் மூன்று வருட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) இப்பயிற்சி பெற்றோருக்கு இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் தொழில் வழங்கப்படாமை காரணமாக இவர்கள் பெரிதும் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
(iii) இவர்களுக்குத் தொழில் வழங்காமல் வேறு நபர்களுக்கு நட்பின் பேரில் இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் தொழில் வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) இதுவரை தொழில் வழங்கப்படாமை குறிப்பிட்ட பயிற்சியைப் பெற்றவர்களுக்குச் செய்யும் பெரும் அநீதியாகுமென்பதையும்;
(ii) இப்பயிற்சி பெற்ற ஊழியர்களிடமிருந்து பயன்பெறாமை மிகப் பெரிய குற்றமாகுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் தந்தை மகன் அடிப்படையில் பயிற்சி பெற்றுள்ள பிள்ளைகளுக்கு துரிதமாக பொருத்தமான தொழில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-10-08
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-08
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks