E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3135/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

    1. 3135/ ’12

      கௌரவ வசந்த அளுவிகாரே,— கைத்தொழில், வாணிப அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    மாத்தளை நாவுல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நாலந்த கைத்தொழிற் பேட்டையினுள் தற்போது,

                (i)      உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை;

      (ii) நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற தொழிற்சாலைகளின் எண்ணிக்கை;

      (iii) நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை;

      எவ்வளவு என்பதை அவா் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்குறிப்பிடப்பட்ட கைத்தொழிற் பேட்டைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு;

      (ii) மேற்குறிப்பிடப்பட்ட கைத்தொழிற் பேட்டையினுள் தொழிற்சாலையொன்றுக்கு வழங்கப்படும் கூடியபட்ச மற்றும் குறைந்தபட்ச நிலப்பரப்பின் அளவு;

      (iii) மேலே (அ) இல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு  தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள காணியின்  அளவு தனித்தனியாக;

      (iv) மேற்குறிப்பிடப்பட்ட  காணிகள் வழங்கப்பட்டதன் அடிப்படை;

      (v) தற்போது கருத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தக் காணியின் அளவு மற்றும் எஞ்சியுள்ள காணியின் அளவு;

      (vi) மேற்குறிப்பிடப்பட்ட கைத்தொழிற் பேட்டையினுள் தொழிற்சாலைகளை ஆரம்பித்துள்ள தொழிற்சாலை உரிமையாளா்களின் பெயா்கள்

      யாதென்பதை அவா் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) நாலந்த கைத்தொழிற் பேட்டைக்கு உரித்தான நிலத்திலிருந்து தனியார் பாவனைக்காக காணித் துண்டுகளை வழங்குவதற்கான  இயலுமை காணப்படுகின்றதா;

      (ii) ஆமெனில்,  இது மேற்கொள்ளப்படும் அடிப்படை யாது;

      என்பதை அவா் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-03

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-02-20

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks