பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3139/ ’12
கௌரவ அப்துல் ஹலீம்,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹாரிஸ்பத்துவ அபிவிருத்தி மன்றம் எனப்படும் நிறுவனத்தினால் 1994 ஆம் ஆண்டில் ஹல்லொலுவ, வராதென்ன மகாவலி ஆற்றின் நடுவே அமைந்துள்ள வரலாற்று ரீதியிலானதொரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு பௌத்த பிக்குமாருக்குப் பூஜிக்கப்பட்ட ‘உதகுக் கேப சீமாமாலகய’ எனும் தலமானது கண்டீய அமரபுர சங்கப் பிரிவின் உயர்தீட்சையளிக்கின்ற மதச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் தலமாகும் என்பதையும்;
(ii) தற்போது இங்கிருந்த புனித தலம் நீக்கப்பட்டு மேற்படி இடத்தில் தனியார் மின் உற்பத்தி நிலைமொன்றை நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்;
(iii) வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மேற்படி புனித தலம் அழிக்கப்படுதல் தொடர்பில் மிகவும் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் அமரபுர சமயப் பிரிவுக்குரிய நாடுபூராவும் உள்ள அநேகமான பொது மக்களும் பிக்குமாரும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகிவருகின்றனர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) கண்டீய அமரபுர சமயப் பிரிவின் வீழ்ச்சிக்கு ஏதுவான மேற்படி தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) வரலாற்றுப் புகழ்மிக்கதும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததுமான ‘உதகுக்கேப சீமாமாலகய’ வில் எதிர்காலத்திலும் தடையின்றி மேற்படி சமயப் பிரிவின் மதச் சடங்குகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-12-04
கேட்டவர்
கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-02-20
பதில் அளித்தார்
கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks