பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3143 / ‘12
கௌரவ ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுமார் நாற்பத்து மூன்று இலட்சம் பாடசாலை மாணவர்களில் உயர் கல்விக்கான வரத்தை பெறுகின்றவர்களின் சதவீதம் யாதென்பதையும்;
(ii) உலகத்தின் ஏனைய நாடுகளுக்கு ஒப்பீட்டளவில் மேற்படி சதவீதமானது ஆகக் குறைந்த மட்டத்தில் உள்ளதென்பதை எற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) கல்விக்காக 2012 ஆம் ஆண்டைத் தவிர கடந்த 20 ஆண்டுகளில் செலவிடப்பட்ட பணத் தொகை அந்தந்த வருடங்களின் மொத்த உள்நாட்டு வருமானத்தின் சதவீதமாக தனித் தனியாக எவ்வளவென்பதையும்;
(iv) 2012 ஆம் ஆண்டில் கல்விக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள பணத் தொகை மொத்த உள்நாட்டு வருமானத்தில் எத்தனை சதவீதமென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) பாடசாலைக் கல்விக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் சேகரித்தல் தற்போது பொதுவாக நடைமுறையிலுள்ள செயற்பாடாகும் என்பதையும்;
(ii) அரசாங்கம் கல்விக்கு போதியளவு பணத்தை ஒதுக்காமையே இதற்கான காரணம் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-19
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-18
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks