E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3151/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3151/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,—  நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இலங்கை கப்பல் கைத்தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள துறைமுகங்களை இயக்கும் ஐந்து நாடுகளையும்;

                 (ii)     மேற்சொன்ன நாடுகளிலுள்ள ஒவ்வொரு சம்பந்தப்பட்ட துறைமுகத்தினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்களை வெவ்வேறாகவும்;

      (iii) அத்தகைய அச்சுறுத்தல்களுக்கெதிராகப் போராடுவதற்கும் அவற்றை உள்ளூர் கப்பல் போக்குவரத்திற்கு அனுகூலமாக்குவதற்கும் இலங்கை எவ்வாறு உத்தேசித்துள்ளது என்பதையும்;

      (iv) வருடவாரியாக 2010, 2011, 2012 ஆகிய வருடங்களில் அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள அச்சுறுத்தல் விடுக்கும் துறைமுகங்களின் கொல்கலன் ஏற்றி இறக்குதல்களை வெவ்வேறாகவும்;

      (v) எதிர்வரும் ஐந்து வருடங்களில் மேற்சொன்ன துறைமுகங்களின் நடவடிக்கை தொடர்பான எதிர்பார்ப்புக்களையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) (i) இலங்கை கொள்கலன் ஏற்றி இறக்கல்களை எந்தத் துறைமுகங்களிலிருந்து கவர்ந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றது என்பதையும்;

      (ii) மேற்படி துறைமுகங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படவுள்ள கொள்கலன் ஏற்றி இறக்குதல்களின் எண்ணிக்கையை வெவ்வேறாகவும்;

      (iii) இலங்கை துறைமுக அதிகாரசபையினால் பொறுப்பேற்றுக்கொள்ளப்படவிருக்கும் மேற்சொன்ன கொள்கலன் ஏற்றி இறக்குதல்களின் மொத்த எண்ணிக்கையையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-04

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-04

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks