E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3166/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

    1. 3166/ ’12

      கௌரவ ஈ. சரவணபவன்,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பொது நிருவாக சுற்றறிக்கை இல.49/89 இன்படி ஆதனங்களுக்கான இழப்பீடு வழங்குவதற்கு வடக்கு  கிழக்கு மாகாண சபை அமைச்சு நடவடிக்கை எடுத்த போது அந்த அமைச்சின் சிபாரிசுடன் புனர்வாழ்வளிப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு கிடைத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அனைவருக்கும் இழப்பீடு செலுத்தப்பட்டதா என்பதையும்;

      (iii) அவ்வாறு செலுத்தப்படவில்லையெனில், செலுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iv) நட்ட ஈடு செலுத்தப்படாத விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) கடந்த சந்தர்ப்பத்தில் 49/89 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி வேண்டுகோள் விடுத்தவர்களில் இதுவரை இழப்பீடு கிடைக்காத, பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நலன்புரி முகாம்களிலிருந்து வந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் மீள குடியமர்ந்துள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா?

      (இ) மேற்கூறியவர்களுக்கு துரிதமாக இழப்பீடு வழங்கி அவர்களது வாழ்க்கையை சுமுக நிலைக்கு கொண்டுவருவதற்கு ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-06

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-05-09

பதில் அளித்தார்

கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks