E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3172/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

    1. 3172/ ’12

      கௌரவ ஈ. சரவணபவன்,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மருதங்கேனி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உரித்தான கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

                 (ii)     இவற்றில் சேவையாற்றுகின்ற கிராம அலுவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iii) மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற இப்பிரதேசங்களில் காணப்படுகின்ற கிராம அலுவலர் பதவி வெற்றிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படுகின்ற கிராம அலுவலர் பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற நிரந்தர கிராம அலுவலர்கள் இல்லாத பதில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தனித்தனியே எவ்வளவு என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-04-09

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-04-09

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks