பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3174/ ’12
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணிவரை தனியார் போதனை வகுப்புக்களை நடாத்தவேண்டாமென கடும் சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்காலப்பகுதியினுள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிறிய மற்றும் பாரியளவான தனியார் போதனை வகுப்புகள் நடாத்தப்படுவதன் காரணமாக அறநெறிப் பாடசாலைகளுக்கு வருகைதருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்பதையும்;
(ii) அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற பாடப் புத்தகங்கள் போதியளவில் உரிய நேரத்திற்குக் கிடைப்பதில்லை என்பதையும்
(iii) அறநெறிப் பாடசாலை இறுதி ஆண்டுப் பரீட்சையை நடாத்தும் திகதிகளை மாற்றியமைப்பதானது அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும்;
(iv) அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற சீருடைக் கொடுப்பனவு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) பிள்ளைகளுக்கு அறநெறிப் பாடசாலைக் கல்வியை பழக்கப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) அறநெறிப் பாடசாலை பாடப் புத்தகங்களை ஒழுங்காக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(iii) அதிலுள்ள தடைகள் யாவை என்பதையும்;
(iv) ஆசிரியர்களின் சீருடைக் கொடுப்பனவை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதற்கும், இறுதி ஆண்டுப் பரீட்சை நடைபெறுகின்ற திகதியை மாற்றியமைத்து சிறுவர்கள் அசெளகரியங்களை எதிர்கொள்வதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-07
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-05-07
பதில் அளித்தார்
கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks