பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3193/ ’12
கெளரவ எம்.ரீ. ஹசன் அலி,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன , மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது கொழும்பு 09, தெமட்டகொட, பேஸ்லைன் வீதி, 575/17 ஆம் இலக்க இடத்தில் தற்காலிகமாக வசிக்கும் திரு. எம். இராமசாமிக்கு அனுமதியற்ற குடியிருப்பாளர்களுக்காக வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் பேலியகொடை குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கான வீடமைப்புத் தொகுதியிலிருந்து வாடகை அடிப்படையில் வீடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளதென்பதையும்;
(ii) திரு. எம். இராமசாமிக்கு குடியிருப்பதற்காக வீடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் 10.05.187 ஆம் இலக்க 2005.09.26 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு HRC/165/03/7 (VI) இலக்கத்தின் கீழ் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும் அது இதுவரை நடைமுறைபடுத்தப் படவில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) திரு. எம். இராமசாமிக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நிரந்தர குடியிருப்பின் பொருட்டு வீடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-26
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks