E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3194/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

    1. 3194/ ’12

      கெளரவ எம்.ரீ. ஹசன் அலி,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     கொழும்பு 9, தெமட்டகொட நீர்த்தேக்க ஒழுங்கையில் 87/4 ஆம் இலக்க இடத்தில் அமைந்துள்ள கொழும்பு மாநகர சபைக்குரிய உத்தியோகபூர்வ இல்லம், கொழும்பு மாநகர சபையின் நீர்த்தேக்கப் பொறுப்பாளர் பதவியை வகித்த திரு. ஏ.எஸ்.பி. செனவிரத்ன குடியிருப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது என்பதையும்;

      (ii) அந்த நபர் 2007ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் என்பதையும்;

      (iii) அவரது மனைவி அல்லது பிள்ளைகள் இல்லாததை மறைத்து தற்போது அந்த இல்லத்தில் செனவிரத்ன எனும் பெயரில் அழைக்கப்படுபவர் ஒருவருடன் குடும்பமொன்று பலவந்தமாக குடியமர்ந்து உள்ளதென்பதையும்;

      (iv) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் (வழக்கு இல. 13724/எம்) இவர்களை அங்கிருந்து வெளியேற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்கூறிய இடத்தில் தற்போதுள்ள அத்துமீறிய குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-26

கேட்டவர்

கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks