பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3195/ ’12
கெளரவ எம்.ரீ. ஹசன் அலி,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி, மிலித்தூவ, எச்.கே. எட்மன்ட் மாவத்தை, இலக்கம் 160 எனுமிடத்தில் வதியும் திரு. எம். இஸட். மொஹமட் மற்றும் திருமதி பாத்திமா சனீராவுக்குச் சொந்தமான தனியார் காணியொன்று போலியான உறுதியொன்றின் மூலம் உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக காலி, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினால் காலி நீதவான் நீதிமன்றில் 21972 ஆம் இலக்கத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு பொலிசாரினாலேயே வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) 1977 ஆம் இலக்க, 2002.11.23 ஆம் திகதிய குறித்த போலி உறுதியில் கையொப்பம் அல்லது பெருவிரல் அடையாளத்தில் திரிபுபட்ட தன்மையொன்று காணப்படுவதாக விரல் அடையாளப் பதிவாளரினால் இல லீ.லே 07/2009 மற்றும் 2010.02.08 ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மேற்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) மேற்படி போலி உறுதியைத் தயாரித்த நொத்தாரிசுக்கு அல்லது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) குறித்த போலி உறுதியைத் தயாரித்த நொத்தாரிசு உள்ளடங்கிய சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக தாமதிக்காது சட்ட நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-26
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks