பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3204/ ’12
கெளரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005 - 2011 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருடாந்தம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு பழ வகையினதும் கிலோ ஒன்றிற்கான இன்றைய விலை எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை நீண்டகாலம் பேணி வைத்திருப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட முறையியல்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி முறையியல்கள் மனித உடலுக்கு உகந்ததா என்பதையும்;
(iii) சுகாதார திணைக்களத்திலிருந்து அல்லது வேறொரு நிறுவனத்திலிருந்து மேற்படி முறையியல் தொடர்பில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படுகின்றதா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) உள்நாட்டு பழங்களை நீண்டகாலம் பேணி வைத்திருப்பதற்கு பயன்படுத்தப்படும் முறையியல்கள் யாவை என்பதையும்;
(ii) உள்நாட்டு பழங்களை விரைவாக கனியச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் முறையியல்கள் யாவை என்தையும்;
(iii) மேற்படி முறையியல்களுக்கு கமத்தொழில் திணைக்களம் அல்லது நுகர்வோர் அதிகார சபை அனுமதி அளித்துள்ளதா என்பதையும்;
(iv) பழங்களை கனியச் செய்வதற்கு இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்துவதால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படாதென கமத்தொழில் திணைக்களத்தின் மூலம் நுகர்வோருக்கு உறுதியளிக்கப்படுமா என்பதையும்;
(v) நுகர்வோருக்கு சுத்தமானதும் தரமானதுமான பழ வகைகளை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-08
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-05-08
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks