E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3218/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3218/ ’12

      கௌரவ புத்திக பதிரண,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     கண்டி மாவட்டத்தின் கலகெதர தும்பனே பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்திலிருந்து  அகற்றப்படுகின்ற குப்பை கூளங்களும்  திண்மக் கழிவுப்பொருட்களும் பூஜாபிட்டிய பிரதேச சபைக்குச் சொந்தமான திக்ஒயவத்த எனும் காணியில் இடப்படுவதென்பதையும்;

      (ii) அகற்றப்படுகின்ற கழிவுப் பொருட்கள் அப் பிரதேசத்தில் நீருடன் கலக்கின்றமையால் சுற்றிலுமுள்ள மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர் என்பதையும்;

      (iii) கழிவுப் பொருட்கள் இவ்விடத்தில் இடப்படுவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டுள்ள போதிலும் இற்றை வரை  தீர்வொன்று கிடைக்கவில்லையென பிரதேசத்தில் வாழும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனரென்பதையும்;

      (iv) குப்பை கூளங்கள் ஏற்றிச் செல்லப்படுவதால் சுற்றுபுறத்திலுள்ள பல வீதிகள் தற்போது சேதமடைந்துள்ளதென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) கழிவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதால் சேதமடைந்துள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இடப்படுவதை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-18

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks