பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3253/ ’12
கௌரவ பி. ஹரிசன்,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்தற்கு,—
(அ) (i) 2012 நவம்பர் மாதம் 09 ஆந் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுக்கான காரணம் யாதென்பதையும்;
(ii) அன்றைய தினம் சிறைச்சாலையை சோதனையிடுவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டமைக்கான காரணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சோதனையிடுதல் போதியதாயில்லாமையா என்பதையும்;
(iii) இதற்காக அந்த படையணியை ஈடுபடுத்துவதற்கு கட்டளை வழங்கியவர் யார் என்பதையும்;
(iv) சிறைச்சாலையை சோதனையிடும் பணியில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(v) இவர்கள் சிறைச்சாலைக்குள் ஆயுதங்களுடன் பிரவேசித்தார்களா என்பதையும்
அவர் இச் சபையில் அறிவிப்பாரா?
(ஆ) மேலே குறிப்பிடப்பட்ட மோதலில்,
(i) கைதிகளுக்கு ஆயுதக் களஞ்சியத்தில் பிரவேசித்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் உதவி கிடைத்ததா என்பதையும்;
(ii) மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதென்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) (i) சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்திலிருந்து ஆயுதங்களைப் பெறுவதற்கு கைதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
(ii) உயிரிழந்த கைதிகள் சார்பில் நட்டஈட்டுத் தொகையொன்றைச் செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதையும்;
(iii) இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-20
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-02
பதில் அளித்தார்
கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks