E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3256/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3256/ ’12

      கௌரவ பி. ஹரிசன்,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      சிறைக் கைதிகளை பார்ப்பதற்காக வரும் நபர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிறைச்சாலையினுள் பிரவேசிக்கும்போது சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனரா என்பதையும்;

                (ii)     அவ்வாறாயின், சிறைச்சாலையினுள் போதைப்பொருள் மற்றும் செல்லிடத் தொலைபேசிகளைக் கொண்டு வருபவர்கள் யாவர் என்பதையும்;

      (iii) சிறைச்சாலையினுள் இடம்பெறும் முறைகேடான சம்பவங்களுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கின்றதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (iv) அவ்வாறாயின், அந்த உத்தியோகத்தர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) வெலிக்கடை சிறைச்சாலையினுள் இட வதிகளை வழங்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) தற்போது மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-05

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-23

பதில் அளித்தார்

கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks