E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3286/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

    1. 3286/ ’12

       

      கௌரவ கயந்த கருணாதிலக்க,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இணைந்த சேவைக்கு உரித்தான அரசாங்க மொழி பெயர்ப்பாளர் சேவையில்  பாரிய உத்தியோகத்தர் பற்றாக்குறை நிலவுகின்றது என்பதையும்;

                 (ii)    மேற்படி சேவையில் இணைவதற்கும் சேவையில் நிலைத்து நிற்பதற்கும் உற்சாகமளிக்கும் வகையில் சம்பளம் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்படாமையினால் வெளியிலிருந்து நபர்கள் சேவைக்குள் ஈர்க்கப்படாமையும், சேவையில் இணைந்து கொண்டவா்களும் தொடா்ச்சியாக சேவையை விட்டு நீங்கிச் செல்வதும் மேற்படி உத்தியோகத்தர் பற்றாக்குறைக்கான காரணங்களாகும்  என்பதையும்;

      (iii) 06/2006 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் மூலம் ஒட்டுமொத்த சேவையும், முன்னர் அதற்கு சமமான மட்டத்தில் காணப்பட்ட  ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் சம்பள அளவுத் திட்டங்களைப் பொறுத்தவரை கீழ் மட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளதென்பதையும்;

      (iv) இந்த நிலைமையானது மும்மொழி ரீதியிலான இலங்கையை முன்னிட்டான வேலைத்திட்டத்துக்கு  முற்றிலும் முரணானது என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி மொழிபெயர்ப்பாளர்  சேவை இழந்துள்ள உரிய வரவேற்பையும் சேவை அந்தஸ்தினையும் மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு தற்போது ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுதும் திகதி யாது என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-23

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-02

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks