E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3311/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3311/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2010 செப்டம்பர் மாதத்திலிருந்து இற்றைவரை,

                 (i)     வட - கிழக்கு யுத்தத்தின் பின்னர் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதி முகாம்களின் அமைவிடங்களையும்;

      (ii) அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆட்களின் எண்ணிக்கை ஏதுமிருப்பினும் அவற்றையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) 2010 செப்டம்பர் மாதத்திலிருந்து இற்றைவரை,

      (i) எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்களாகக் கைதுசெய்யப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையையும்;

      (ii) ஒவ்வொரு முகாமிலும் உள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாகவும்;

      (iii) அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளின் வகைகளையும்;

      (iv) அவர்களின் எதிர்கால நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும்

      அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-24

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks