பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3328/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3328/ ’12

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுதேச மருத்துவத் துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     2012ஆம் ஆண்டின் இறுதியளவில் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் கீழ் காணப்பட்ட,

                 (i)     நட்டத்தில் இயங்கும் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை யாது;

      (ii) நட்டத்தில் இயங்கும் மேற்படி விற்பனை நிலையங்கள் யாவை;

      (iii) மேற்படி விற்பனை நிலையங்களிலிருந்து இழந்த ஒட்டுமொத்த அறவீடுகளின் அளவு யாது;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) சுதேச மருத்துவத்துறை அமைச்சின் கீழ் உள்ள விற்பனை நிலையங்களுக்கு பாவனையாளர்களின் தேவைப்பாடுகளுக்கு ஏற்றவகையில் மருந்துப் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்கின்றனவா;

      (ii) இன்றேல் அதற்கான காரணங்கள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-08

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுதேச மருத்தவத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-08

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ சீ.பி.டீ. பண்டாரநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks