E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3372/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3372/ ’12

      கௌரவ பி. ஹரிசன்,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     வட மத்திய மாகாண சபை உறுப்பினரொருவருக்கு கிடைக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்;

                 (ii)    மேற்படி நிதியை எத்தகைய அபிவிருத்திப் பணிகளுக்காக செலவிட வேண்டுமென்பது சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில் அப்பணிகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) பன்முகப்படுத்தப்பட்ட நிதியத்திலிருந்து கிடைக்கின்ற நிதி,

      (i) ஏற்புடைய சங்கங்களுக்கு அல்லது நபர்களுக்கு உரிய முறையில் கிடைப்பதில்லை என்பதையும்;

      (ii) சில மாகாண சபை உறுப்பினர்களால் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றதென்பதையும்;

      (iii) செலவிடப்படுகின்றபோது சில மாகாண சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர் களுடைய உதவியுடன் மோசடிகளில் ஈடுபடுகின்றனரென்பதையும்

      அவர் அறிவாரா?

      (இ) (i) மாகாண சபைகளுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்படும் போது ஏற்புடைய பிரதேச செயலகங்களின் தலையீடு நடைபெறுகின்றதா என்பதையும்;

      (ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) பிரதேச செயலகங்களினூடாக மேற்படி பணி மேற்கொள்ளப்படுமெனில் மாகாண சபை அது தொடர்பாக  பின்ஆய்வை மேற்கொள்கின்றதா என்பதையும்;

      (iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (v) பன்முகப்படுத்தப்பட்ட நிதியை செலவிடுதல் பிரதேச செயலகங்களின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்காக நடைபெறுகின்றதா என்பதையும்;

      (vi) ஆமெனில், அதன் முன்னேற்றத்தை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-28

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-09-03

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks