E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3382/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3382/ ’12

      கெளரவ பி. ஹரிசன்,—  வனசீவராசிகள் வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் இன்று வரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காட்டு யானைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான மின்சார வேலிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

                 (ii)    மேற்படி மின்சார வேலிகளின் மொத்த நீளம் எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி வேலிகளின் பராமரிப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iv) ஒரு கிலோ மீட்டர் மின்சார வேலியின் நிர்மாணிப்புக்கும் பராமரிப்புக்குமாக ஏற்படுகின்ற மொத்த செலவு தனித்தனியாக எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) கடந்த 05 வருடத்தினுள்,

      (i) நிர்மாணிக்கப்பட்டுள்ள காட்டு யானைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான மின்சார வேலிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு மின்சார வேலியின் நீளம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iii) யானை- மனித மோதலின் காரணமாக இழக்கப்பட்டுள்ள மனித உயிர்கள், சொத்துக்கள் மற்றும் காட்டு யானைகளின் எண்ணிக்கை வருட ரீதியில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி சேதங்களுக்காக அரசாங்கம் செலுத்தியுள்ள நட்டஈட்டுத் தொகை எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேலே குறிப்பிடப்பட்டவாறு பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறையில் உள்ளபோதிலும், காட்டு யானைகளின் உயிர்கள், மனித உயிர்கள் மற்றும் சொத்துக்கள் என்பவற்றுக்கு சேதம் ஏற்படுதல் அதிகரித்துள்ளதென்பதையும்;

      (ii) எனவே, மேற்படி முறைகளைவிட மாற்று முறைகளைக் கடைப்பிடித்தல் பொருத்தமாகுமென்பதையும்

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஈ) ஆமெனில், மேற்படி இ (ii) இற்கு ஏற்புடையதான மாற்று முறையை அவர் இச்சபைக்கு வெளிப்படுத்துவாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-23

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் வளப் பேணுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-19

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks