E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3383/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3383/’12

      கௌரவ பி. ஹரிசன்,—  வனசீவராசிகள் வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    இலங்கையில் உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்ற இயற்கைக் காட்டு யானை பாதுகாப்பு நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ)   மேலே குறிப்பிடப்பட்ட  ஒவ்வொரு நிலையத்தினதும்,

                 (i)      பெயர், அமைவிடம், பரப்பளவு மற்றும் நிர்மாணிப்பதற்காக மதிப்பிடப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;

      (ii) எதிர்பார்க்கப்படும் பணிகள் யாவை;

      (iii) நிர்மாணிக்கப்படும் மின்சார வேலிகளின் நீளம் மற்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்க எதிர்பார்க்கப்படும் பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;

      (vi) மின்சார வேலிகளை பராமரிப்பதற்காக ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கு செலவாகும் பணத் தொகை எவ்வளவு;

      (v) ஒரு நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் உத்தியோகத்தர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு

      என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) ஹொரவ்பத்தான காட்டு யானைகள் பாதுகாப்பு நிலையத்தில்,

      (i) நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாவிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றுக்காக மதிப்பிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு;

      (ii) நிர்மாணிக்கப்படும் புற்தரைகளின் எண்ணிக்கை மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

      (iii) யானைகளை புனர்வாழ்வளிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் காலம் எவ்வளவு;

      (iv) புனர்வாழ்வளிக்கப்படும் அந்த யானைகள் விடுவிக்கப்படும் பிரதேசங்கள் யாவை;

      (v) புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படும் யானைகள் தொடர்பாக பின்னாய்வு மேற்கொள்ளப்படுமாயின், அது எவ்விதத்தில் மேற்கொள்ளப்படும்

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-24

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் வளப் பேணுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-04

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks