E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3433/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3433/ ’13

      கெளரவ பி. ஹரிசன்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளினால் அகதிகளாகிய குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அக்குடும்பங்களைச் சேர்ந்த மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை  யாதென்பதையும்;

      (ii) இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) ஒவ்வொரு மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக செலவு செய்யப்பட்ட மேற்படி பணத் தொகை எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்த ஒருவருக்காக சமைத்த உணவினை வழங்குவதற்கு நாள் ஒன்றுக்காக ஒதுக்கப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) இப் பணத்தொகை ஒதுக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (iii) மேற்படி அனர்த்தங்களுக்கு உள்ளாகிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பால்மா பெற்றுக்கொடுப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டதா என்பதையும்;

      (iv) மேற்படி குடும்பங்களுக்கு உலர் நிவாரணம் வழங்கப்பட்டதா என்பதையும்;

      (v) ஆமெனில், அதற்காக ஒதுக்கப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (vi) எவ்வளவு காலத்திற்காக இப்பணத் தொகைகள் ஒதுக்கப்பட்டன என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) வெள்ளத்தினால் சேதமடைகின்ற அனுமதியற்ற குடியிருப்பாளர்களின் வீடுகள் சார்பாக நட்டஈடு வழங்கப்பட்டதா என்பதையும்;

      (ii) ஆமெனில் அப்பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) நித்தமும் வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் ஆறுகள், வாய்க்கால்கள், சிற்றாறுகள் மற்றும் குளங்களின் பாதுகாக்கப்பட்ட  பிரதேசங்களிலிலுள்ள குடியிருப்பாளர்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-26

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

அனர்த்த முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-26

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks