E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3450/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3450/ ’13

      கெளரவ பி. ஹரிசன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கோட்டக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை யாது;

                 (ii)    மேற்படி ஒவ்வொரு கோட்டக் கல்வி அலுவலகத்திலும் சேவையாற்றுகின்ற நிரந்தர ஊழியர் எண்ணிக்கை யாது

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) கோட்டக் கல்விப் பணிப்பாளர் பதவியை வகிப்பதற்காக கொண்டிருக்கவேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் யாவை;

      (ii) வடமத்திய மாகாணத்தில் இருக்கின்ற அத் தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

      (iii) மேற்படி பதவிக்காக பதிற்கடமை அடிப்படையில் கோட்டக் கல்வி அலுவலகங்களில் சேவையாற்றும்  பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

      (iv) பதிற்கடமையாற்றும் உத்தியோகத்தர்களை நியமிக்கும்போது கடைப்பிடித்த நடைமுறை யாது;

      (v) கோட்டக் கல்விப் பணிப்பாளர் பதவியொன்றில் வெற்றிடம் தோன்றுகின்றபோது அதனை நிரப்புவதற்காக கடைப்பிடிக்கவேண்டிய அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை யாது;

      (vi) அந்த வழிமுறை மேலே குறிப்பிட்ட நியமனங்களை வழங்கும்போது கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா;

      (vii) ஆமெனில், தகைமை குறைந்தவர்கள் மேற்படி பதவிகளுக்காக எவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்கள்;

      (viii) மேற்படி பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட தகைமையற்றவர்கள் அப்பதவிக்கு உரித்தான கொடுப்பனவுகளையும் செலவுகளையும் பெற்றிருப்பின் அவற்றை மீளஅறவிட நடவடிக்கை எடுப்பாரா;

      (ix) மேற்படி  தகைமையற்றவர்களுக்கு  பணம் செலுத்திய உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வாரா

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-21

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-21

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks