பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3513/ ’13
கௌரவ வசந்த அலுவிஹாரே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த திப்பட்டுமுல்ல கனிஷ்ட வித்தியாலயம் பல வருடங்களாக மூடப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) மேற்படி வித்தியாலய வளவு மற்றும் கட்டடங்கள் சம்பந்தமாக மாகாண சபையோ மத்திய அரசாங்கமோ இற்றைவரை எவ்விதமான கவனமும் செலுத்தவில்லையென்பதையும்;
(iii) இதன் காரணமாக ஒருசிலர் வித்தியாலய வளவினை கைப்பற்றியுள்ளனர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) 1975 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியளவு, கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய பௌதீக வளங்கள் யாவை என்பதை தனித்தனியாக அவர் குறிப்பிடுவாரா?
(இ) திப்பட்டுமுல்ல கனிஷ்ட வித்தியாலயம்
(i) மூடப்பட்ட திகதி;
(ii) மூடப்பட்ட வேளையில் கல்வி பயின்ற மாணவர் எண்ணிக்கை மற்றும் சேவையாற்றிய ஆசிரியர் எண்ணிக்கை;
(iii) மூடப்பட்டமைக்கான காரணங்கள்;
யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) மூடப்பட்டுள்ள இப்பாடசாலையை அபிவிருத்திசெய்து மீண்டும் ஆரம்பிக்க அல்லது பாடசாலை வளவினையும் அதன் கட்டடங்களையும் வேறு பயனுள்ள பணிக்காக ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-11
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-10
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks