பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3521/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3521/ ’13

      கௌரவ புத்திக பதிரண,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் முன்னர் காணப்பட்டதும், தற்போது கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ்  உள்ளதுமான பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பின் நோக்கங்கள் மற்றும் பணிகள் யாவை;

      (ii) மேற்படி நம்பிக்கைப் பொறுப்பினால் 1992 ஆம் ஆண்டு  முதல் 2005ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினுள் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீ்டுகளின் எண்ணிக்கை யாது;

      (iii) 2005 ஆம் ஆண்டின் பின்னர், இதுவரையில் குறிப்பிட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள  வீடுகளின் எண்ணிக்கை யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்ட பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பு கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சுக்கு  ஒப்படைக்கப்பட்டமையால், இந்த நம்பிக்கைப் பொறுப்பினால் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடைமுறைப் படுத்தப்பட்ட நலனோம்புகை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக குறித்த ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் என்பதை அறிவாரா;

      (ii) ஆமெனில்,  மேற்படி நிலைமையை மாற்றியமைத்து, தோட்டத் தொழிலாளர் களுக்காக பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நலனோம்புகை நடவடிக்கைகளை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-09

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ எச்.ஆர். மித்ரபால, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks