E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3526/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3526/ ’13

      கெளரவ புத்திக பதிரண,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கம்புறுப்பிட்டிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரிவில் வயல் காணிகள் மீட்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பதை அறிவாரா;

                 (ii)     2005 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை இப்பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் அனுமதியின்றி மீட்கப்பட்டுள்ள வயல் காணிகளின் அளவு யாது;

      (iii) மேற்படி அனுமதியற்ற காணி மீட்பு தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவா;

      (iv) அவ்வாறாயின், கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு;

      (v) மேற்படி முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை நடாத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா;

      (vi) இதன்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை கம்புறுப்பிட்டிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயல் காணிகளை மீட்பதற்கு சட்டபூர்வமாக அனுமதி பெறப்பட்டுள்ளதா;

      (ii) அவ்வாறாயின், மீட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாது;

      (iii) மேற்படி வயல் காணிகளை மீட்பதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கான காரணங்கள் யாவை;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-20

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks