E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3577/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

    1. 3577/ ’13

       கெளரவ சுஜீவ சேனசிங்க,— சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     ஸ்ரீ லங்கன் விமான சேவையை புனரமைப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேற் அரசின் ஒஸரேன் வங்கியிலிருந்து அமெரிக்க டொலர் 175 மில்லியன் கடன் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) பெறப்படும் ரூபா 21 பில்லியனில் ரூபா 15 பில்லியன் கடன்தொகை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தீர்க்கப்படவுள்ளதா என்பதையும்;

      (iv) விமான நிலையத்திற்காக தேவைப்படும் கடன்தொகை எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) உள்ளக விமான நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவிலான அரச காணிகள் இருக்கும் போது அதற்காக நுவரெலியா பொரலந்த பிரதேசத்தில் பேதுருதாலகால தோட்டத்தைத் தெரிவு செய்வதற்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-23

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks