பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3587/ ’13
கௌரவ புத்திக பதிரண,— கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நீர்கொழும்பு பிரதேசத்தில் ருக்மணீ தேவி ஞாபகார்த்த நூதனசாலை மற்றும் ருக்மணீ தேவி அரங்கேற்ற கலை நிலையம் என்ற பெயர்களில் இரு நிறுவனங்கள் பேணிவரப்படுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) அவற்றின் நிருவாகத்தை மேற்கொள்கின்ற நிறுவனம் யாதென்பதையும்;
(iii) 2010, 2011 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் மேற் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களும் பெற்ற வருடாந்த வருமானம் தனித்தனியாக யாதென்பதையும்;
(iv) மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களில் மேற்படி நிறுவனங்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக செலவிடப்பட்ட மொத்தச் செலவு வருட ரீதியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ருக்மணீதேவி அரங்கேற்ற கலை நிலையத்திலும் நூதனசாலையிலும் உள்ள அரிய பொருட்களும் புகைப்படங்களும் உரிய பராமரிப்பு இன்றி அழிவடைந்து வருகின்றதென்பதையும்;
(ii) அரங்கேற்ற கலை நிலையத்தின் கூரையும் மழை நீர் பீலிகளும் பழுதடைந்து வருகின்றதென்பதையும்
அவர் அறிவாரா?
(இ) மேற்படி நூதனசாலையும் அரங்கேற்ற கலை நிலையமும் இயங்கி வருகின்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-02-06
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கலாசார, கலை அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-18
பதில் அளித்தார்
கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks