E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3597/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

    1. 3597/ ’13

      கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— சுதேச மருத்துவத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      தொழிலற்ற ஆயுர்வேத பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) இறுதியாக ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;

      (iii) அச்சந்தர்ப்பத்தில் நியமனங்கள் வழங்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) ஆயுர்வேத மருத்துவ பட்டதாரியொருவரை உருவாக்குவதற்காக அரசாங்கம் செலவிடும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) ஆயுர்வேத மருத்துவர்களது பற்றாக்குறையின் காரணமாக மூடப்பட்டுள்ள மருந்தகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) மேற்படி மருந்தகங்களுக்கு ஆயுர்வேத மருத்துவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-23

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

சுதேச மருத்தவத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-16

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks