E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3609/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3609/ ’13

      கெளரவ பி. ஹரிசன்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)  2012 திசெம்பர் மற்றும் 2013 சனவரி காலப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அநுராதபுர மாவட்டத்தில் விலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில்,

                 (i)     பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) முழுமையாக மற்றும் ஒரு பகுதி சேதமடைந்ததால் இழப்பீடு வழங்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) இழப்பீடு வழங்கப்படாத முழுமையாக மற்றும் ஒரு பகுதி சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி வெள்ளப்பெருக்கு காரணமாக இப் பிரதேச செயலாளர் பிரிவில் சேதமடைந்த பயிர்ச்செய்கைகள் யாவை என்பதையும்;

      (ii) இப் பயிர்ச்செய்கை காணிகளின் பரப்பளவு யாது என்பதையும்;

      (iii) முழுமையாக சேதமடைந்த மற்றும் ஒரு பகுதி சேதமடைந்த வயல் ஏக்கர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iv) முழுமையாக சேதமடைந்த ஏனைய பயிர்ச்செய்கைக் காணி ஏக்கர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (v) முழுமையாக சேதமடைந்த மற்றும் ஒரு பகுதி சேதமடைந்த ஒரு ஏக்கர்வயல் காணிக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (vi) முழுமையாக மற்றும் ஒரு பகுதி சேதமடைந்த ஏனைய மேலதிக பயிர்ச் செய்கைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vii) அவ்வாறாயின், வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (viii) மேலே குறிப்பிட்டவாறு இழப்பீடு வழங்கப்படாவிடின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-06

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

அனர்த்த முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-06

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks