பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3616/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சைக்கு ஒவ்வொரு மொழி மூலத்திற்கும் ஏற்ப தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு வருடத்திலும் மேற்படி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் ஒவ்வொரு மொழி மூலத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சையின் வினாத்தாள்களை தட்டச்சு செய்வது யாரென்பதையும்;
(iv) அது எவ்விடத்தில் நடைபெறுகின்றதென்பதையும்;
(v) சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சையின் வினாத்தாள்களை சரவை பார்ப்பவர் யாரென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சையின் பெறுபேறு அட்டவணையில் விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர். முகவரி, பால், தோற்றிய மொழி மூலம் போன்ற அடிப்படை விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-10-25
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-20
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks