பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3653/ ’13
கௌரவ புத்திக பதிரண,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புத்தளம் மாவட்டத்தின் வில்பத்து தேசிய வனப்பூங்காவுடன் இடையறாது இணைந்துள்ள வீரக்குளிச்சோலை – எழுவான்குளம் உத்தேச வன ஒதுக்கத்திற்கு சொந்தமான தப்போவ சரணாலயத்துடன் இணைந்ததாக அமைந்திருக்கும் 250 ஏக்கர் நிலப்பரப்பு தற்போது எச்.வீ.ஏ.பாம் நிறுவனத்தினால் பெக்கோ இயந்திரத்தைக் கொண்டு துப்புரவாக்கப்படுகின்றது என்பதையும்;
(ii) அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த வனப் பரப்பிற்கு போலியான உறுதியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) இந்த வனப்பரப்பிற்காக தயாரிக்கப்பட்ட போலி உறுதிக்கு வனாத்தவில்லுவ பிரதேச செயலாளர் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி நிறுவனம் வனப் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்ற நிர்மாணிப்பு களுக்கு சட்டரீதியான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) வனசீவராசிகள் மற்றும் தொல்பொருளியல் ஒதுக்கங்கள் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் எச்.வீ.ஏ. பாம் நிறுவனம் பேணிவரப்படுகின்றமையால் பெரும் சுற்றாடல் சேதம் ஏற்படுபடுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) ஆமெனில், ,இந்நிலையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-20
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-20
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks