E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3700/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

    1. 3700/ ’13

      கௌரவ அனுர திசாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் எரிபொருள் சந்தையில் பெற்றோல், டீசல் மற்றும் சுபிரி டீசல் ஆகிய ஒவ்வொரு வகை எரிபொருள் தொடா்பிலும்  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள சந்தைப்படுத்தல் சதவீதம் வெவ்வேறாக யாது;

      (ii) மேற்படி சதவீதங்களுக்கமைய ஒவ்வொரு வகை எரிபொருளினதும் லீற்றர்களின் அளவு வெவ்வேறாக யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கையினுள் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர, எரிபொருள் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள வேறொரு  கம்பனி உள்ளதா;

      (ii) ஆமெனில், எரிபொருள் சந்தையினுள் குறித்த கம்பனி பெற்றோல், டீசல் மற்றும் சுபிரி டீசல் விற்பனையில் கொண்டுள்ள சதவீதம் வெவ்வேறாக யாது;

      (iii) மேற்படி சதவீதங்களுக்கமைய எரிபொருள் லீற்றர்களின் அளவு வெவ்வேறாக யாது;

      (iv) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குக் கிடைக்காத விஷேட வரிச் சலுகைகள் குறித்த கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளதா;

      (v) ஆமெனில், மேற்படி சலுகைகள் வழங்கப்பட்டுள்ள கால வரையறை யாது;

      (vi) இத்தகைய விஷேட சிறப்புரிமைகளை மேற்படி கம்பனிக்கு வழங்குவதற்கான காரணங்கள் யாவை;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-07

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-07

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks