பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3733/ ’13
கௌரவ ரஞ்ஜன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலலோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சவுதி அரேபியாவில் சிரச்சேத தண்டனைக்கு உள்ளாகி உயிரிழந்த முத்தூரைச் சேர்ந்த, பராயமெய்தாத ரிஸானா நபீக் எனும் பாடசாலை மாணவியை ஏமாற்றி போலி விமானக் கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குற்றம் காரணமாக பதிவு இரத்துச்செய்யப்பட்ட “ஒமார் ரெவல்ஸ்” எனப்படும் தொழில் முகவர் நிலையம் மீண்டும் “ஒமல்கா ரெவல்ஸ்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிவாரா;
(ii) கறைநிரல் பட்டியலில் சேர்க்கப்பட்ட “ஒமார் ரெவல்ஸ்” முகவர் நிலையத்தை அதே பணிப்பாளர் சபையின் கீழ் வேறொரு பெயரில் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கான காரணங்கள் யாவை;
(iii) இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக மோசடி முகவர்கள் மென்மேலும் குற்றங்களைப் புரியத் தூண்டப்படுகின்றனர் என்பதையும், போலியான ஆவணங்களைத் தயாரிக்க அச்சப்படுவதில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொள்வாரா;
(iv) ஆமெனில், இந்நிலைமையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-18
கேட்டவர்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-17
பதில் அளித்தார்
கௌரவ டிலான் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks