E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3734/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

    1. 3734/ ’13

      கௌரவ (திருமதி) அனோமா கமகே,— தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இந்தியாவில் தமிழ் நாடு மாநிலத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கதிர் கசிவு ஏற்படுமாயின், அது தொடர்பாக இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) அவ்வாறான ஒரு நிலைமையை எதிர்கொள்வதற்கு இலங்கை பாதுகாப்பான முன்னேற்பாடுகளை கொண்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், குறித்த பாதுகாப்பு முறையியல் யாதென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) சர்வதேச அணுசக்தி முகவராண்மைச் சட்டவரம்பிற்கமைய, மேலே குறிப்பிட்டுள்ள அணுமின் நிலையத்தை அமைக்கும்போது, அதற்கு 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இலங்கையை விழிப்புணுர்வூட்டுதலும் அதனுடன் தொடர்புடைய இணக்கப்பாட்டைப் பெறுதலும் நடைபெற்றுள்ளதா என்பதையும்;

      (ii) இலங்கையின் அங்கீகாரம் அதற்காக வழங்கப்பட்டிருப்பின், அதற்கு ஏற்புடையதாக்கப்பட்ட நிபந்தனைகள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-26

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-26

பதில் அளித்தார்

கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks