பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3823/ ’13
கெளரவ பி. ஹரிசன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுநீரக நோயாளர்களின் குருதி மாற்றீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த வைத்தியசாலைகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள குருதி மாற்றீடு இயந்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் ஒரு நாளில் குருதி மாற்றீட்டுக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(v) சிறுநீரக நோயாளர்களின் குருதி மாற்றீடு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் தாதிமார் பதவியணியினர் மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சுகாதார சேவைகள் அலுவலகங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த அலுவலகங்கள் ஊடாக இதுவரை இனங்காணப்பட்டுள்ள சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) அநுராதபுர பொது வைத்தியசாலையில் சிறுநீரகப் பதியம் மேற்கொள்ளப் படுகின்றதா என்பதையும்;
(ii) அவ்வாறெனின், அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;
(iii) சிறுநீரகப் பதியம் தற்போது இடம் பெறாவிடின் அதற்கான அசெளகரியங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-23
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-08
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks