E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3834/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3834/ ’13

      கௌரவ புத்திக பதிரண,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் 2013.03.19 ஆம் திகதி பதவியிலிருந்த தலைவர் உட்பட பணிப்பாளர் சபை அங்கத்தவர்களுடைய பெயர்கள், முகவரிகள், கல்வி மற்றும் ஏனைய தகைமைகள், சம்பளம் மற்றும் ஏனைய சிறப்புரிமைகள் தனித் தனியாக யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிலர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளவர்கள் என்பதையும்;

      (ii) சில பணிப்பாளர்களுக்கு எதிராக தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்பதையும்;

      (iii) ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சில உத்தியோகத்தர்கள் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சேவைக்காக ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (இ) (i) மேலே (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள  நிலைமைகளினால் ஒட்டு மொத்த காப்புறுதிக் கூட்டுத்தாபனமே அபகீர்த்திக்கும் வீழ்ச்சிக்கும் உள்ளாகி வருகின்றதென்பதை ஏற்றுகொள்வாரா என்பதையும்;

        (ii) ஆமெனில், மேற்படி நிலைமையை தடுப்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டுள்ள பணிப்பாளர் சபை அங்கத்தவர்களையும் ஊழல்மிக்க உத்தியோகத்தர்களையும் மேற்படி கூட்டுத்தாபனத்தின் சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-24

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-24

பதில் அளித்தார்

கௌரவ சரத் அமுணுகம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks