பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3835/ ’13
கௌரவ புத்திக பதிரண,— பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹபராதூவ, லனுமோதரவில் வதியும் திரு. ஏ. பியல் ஹேமந்த 1991.01.15 ஆம் திகதி பொலிஸ் சேவையில் இணைந்து நாட்டின் பல பிரதேசங்களிலும் கடமையாற்றியுள்ள ஓர் உத்தியோகத்தராவார் என்பதையும்;
(ii) 2010 ஆம் ஆண்டு முதல் களனிய பிரிவின் பேலியகொட பொலிஸ் நிலையத்துக்கு இணைக்கப்பட்டு கடமையாற்றியுள்ளார் என்பதையும்;
(iii) இவர் தனது சேவைக் காலத்தில் வெளிக்காட்டியுள்ள பல்வேறு திறமைகளுக்காக பணப் பரிசுகளையும் பெற்றுள்ள ஓர் உத்தியோகத்தராவார் என்பதையும்;
(iv) 2011.04.13 ஆம் திகதியன்று கடமையை முடித்துவிட்டு வீடு செல்லும் போது அரவம் தீண்டியதால் சில மாதங்கள் மூர்ச்சை நிலையில் இருந்தமையினால் திரு ஹேமந்தவுக்கு கடமைக்கு சமூகமளிக்கவோ அல்லது தனது சுகயீன நிலைமை சம்பந்தமாக சேவை நிலையத்துக்கு அறிவிக்கவோ முடியவில்லை என்பதையும்;
(v) இந்த நிலைமையின் கீழ் 2011.05.14 ஆம் திகதி முதல் இவர் பதவி விட்டு நீங்கியவராக கருதப்பட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) திரு. ஹேமந்த பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு திறமைகளை வெளிக்காட்டிய ஓர் உத்தியோகத்தர் என்பதால் இவரை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-24
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-24
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks