E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3912/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ ருவன் ரணதுங்க, பா.உ.,, பா.உ.

    1. 3912/ ’13

      கௌரவ ருவன் ரணதுங்க,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      முப்படைகளின் மருத்துவ சேவையிலிருந்து சட்டரீதியாக நீங்கியுள்ள மருத்துவர்களை மீண்டும் அரசாங்க மருத்துவ சேவைக்கு ஆட்சேர்க்கும்போது சேவை அனுபவம், தரம் மற்றும் சேவை மூப்பு கவனத்திற் கொள்ளப்படாது இவர்கள் ஆரம்ப தரத்தின் மருத்துவர் பதவியில் அமர்த்தப்படுகின்ற அநீதியானதொரு முறையியல் காணப்படுகின்றது என்பதையும்;

      (ii) இராணுவ சேவையிலிருந்து நீங்கி தொடர்ந்தும் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு விரும்புகின்ற பெரும்பாலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்த நிலைமை காரணமாகியுள்ளது என்பதையும்;

      (iii) இவ்வாறானதொரு நிலைமையிலும், அரசாங்க மருத்துவ சேவையில் இணைந்து கொண்ட மருத்துவர் திரு எம்.டி.டபிள்யு. லொக்குகே உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் தற்போது கடும் அநீதிக்கு உள்ளாகி வருகின்றார்கள் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) தரத்தை குறைத்து மேற்படி மருத்துவர்களை அரசாங்க மருத்துவச் சேவைக்கு ஆட்சேர்ப்பதானது, இராணுவ சேவையின் கீழ் இவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையைத் தவறொன்றாகக் கருதி தண்டனை வழங்குதலாக அமையாதா என்பதையும்;

      (ii) யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் முப்படையின் மருத்துவ படையணியில் இணைந்து ஆற்றியுள்ள சேவையை பாராட்டாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி  மருத்துவர்களை ஆட்சேர்க்கின்றபோது  தாபனக்  கோவையின்  II ஆம் அத்தியாயத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உப பிரிவுகள் மற்றும் 14.4 மற்றும் VII ஆம் அத்தியாயத்தின் 9.3 மற்றும் 9.4 பிரிவுகளுக்கு அமைய பெற்றுக் கொடுக்கத்தக்க அனுசரணைகளைப் பெற்றுக் கொடுக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-09

கேட்டவர்

கௌரவ கெளரவ ருவன் ரணதுங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-18

பதில் அளித்தார்

கௌரவ ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks