பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3937/ ’13
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) “LTL Projects (Pvt.) Ltd.” நிறுவனம் அல்லது இதனை ஒத்த பெயரைக் கொண்டுள்ள நிறுவனத்திற்கு ஏற்புடையதான ஏதேனுமொரு வகையிலான உரிமையை எப்போதாவது இலங்கை மின்சார சபை கொண்டிருந்ததா என்பதையும்;
(ii) ஆமெனின், மேற்படி நிறுவனம் நிறுவப்பட்ட திகதி தொடக்கம் இற்றை வரை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறான அதன் பங்குகளில் இலங்கை மின்சார சபைக்கு உரித்தாக இருந்த பங்குகளின் சதவீதம் எவ்வளவென்பதையும்;
(iii) ஏதேனுமொரு காரணத்தினால் மேற்படி நிறுவனத்தின் பங்குகளில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பங்குகளின் அளவு குறைந்திருப்பின், குறைந்த இப்பங்குகளின் இன்றைய உரிமையை கொண்டுள்ள நிறுவனம்/நபர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி நிறுவனங்கள்/நபர்களுக்கு சொந்தமான பங்குகளின் சதவீதம் எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி நிறுவனங்களுக்கு/நபர்களுக்கு மேற்படி பங்குகள் எந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டன என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-27
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-11-27
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks