பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4052/ ’13
கௌரவ அஜித் குமார,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) காலி, இமதுவை நகர அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு,
(i) நிதி கிடைக்கும் மூலம் யாது என்பதையும்;
(ii) மதிப்பிடப்பட்ட செலவினம் எவ்வளவு என்பதையும்;
(iii) காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) காணிகளை சுவீகரிப்பதற்காக ஏற்புடையதாக்கிக் கொள்ளப்பட்ட, காணி கொள்ளல் சட்டத்தின் பிரிவுகள் யாவை என்பதையும்;
(v) சுவீகரிக்கப்பட்டுள்ள அல்லது அவ்வாறு செய்யவுள்ள காணிகள் மற்றும் ஆதனங்களுக்கு நட்டஈடு செலுத்தப்படுமா என்பதையும்;
(vi) தகர்த்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களுக்காக செலுத்தப்படுகின்ற நட்டஈடு தொடர்பில் குறித்த வியாபாரிகள் அறிவுறுத்தப் படுவார்களா என்பதையும்;
(vii) அகற்றப்படுகின்ற வியாபார நிலையங்களுக்குப் பதிலாக மாற்று வியாபார நிலையங்கள் வழங்கப்படுமா என்பதையும்;
(viii) மாற்று வியாபார நிலையங்கள் வழங்கப்படுகின்ற பிரதேசம் யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இமதுவை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விஸ்தரிக்கப்படுகின்ற காலி – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இமதுவை நகர சந்திக்கு அண்மையிலுள்ள அகலம் எவ்வளவு என்பதையும்;
(ii) இமதுவை நகரத்திற்கு வெளியே நிர்மாணிக்கப்படுகின்ற மாற்று வீதியின் அகலம் எவ்வளவு என்பதையும்;
(iii) மாற்று வீதி மற்றும் நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக மீட்கப்பட்டுள்ள வயற்காணிகள் உரிய முறையியலின் கீழ் சுவீகரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) மேற்படி காணிகளுக்கு நட்டஈடு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) இன்றேல், மேற்படி நட்டஈட்டைச் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-08
கேட்டவர்
கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-08
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks